Search This Blog

Thursday, March 17, 2011

Memorable Status Update - Facebook!

மூஞ்சிப்புத்தகத்தில் பல்வேறு காலகட்டங்களில் என்னால் இடப்பட்ட பதிவுகளில் ஹைலைட்டான சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன். எவரையும் காயப்படுத்து்ம் நோக்கம் எனக்கில்லை. இவை 100% எனது தனிப்பட்ட கருத்துக்கள் தான். என்ன செய்வது, சுடுவதுதானே நெருப்பின் குணம்!
-------------------------------------


Murali Tharan
சலங்கை சத்தம் மட்டுமில்ல, விசில் அடிப்பது போல, வாளால் மரம் அறுப்பது போல, துருப்பிடித்த இரும்பு கேட் திறபடுவது போல என பல அதிசயமான ஒலிகள் எல்லாம் இரவில் கேட்கும். நீங்களும் கேட்டிருப்பீர்கள். எல்லாவற்றிலும் இந்த சில்வண்டுகளின் கைவரிசை இருக்கிறது! கண்ணகை அம்மனை சக்திவாய்ந்த தெய்வமாக்கும் முயற்சியில் பாவம், இந்த சிறிய உயிரினங்களின் திறமையை கொச்சைப்படுத்தவேண்டாம். - நாம் வாழும் அதே உலகத்தின் அங்கத்தவர்கள்தான் அவைகளும்!!


Murali Tharan
இயேசுநாதர் பிறருடைய பாவங்களுக்காக சிலுவை சுமந்தார் என்றால் அவரைப் பின்பற்றி நாமு...ம் பிறர் துன்பத்தை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மாறாக இயேசுவை வணங்கினால் மட்டும் போதும் என்று இருப்போமானால் அது ஏட்டுச் சுரக்காயை பந்தியில் பறிமாறுவது போலத்தான்...



Murali Tharan
“அந்தப் படிக்கட்டுக்கள் மாடியிலிருந்து ஹாலுக்குப் போயின என்று சொன்னீர்கள்” “ஆமாம” ............ “ஹாலிலிருந்து மாடிக்கும் அவை போயினவா?” “ஆமாம்” “யுவர் ஹானர் சாட்சி குழப்புகிறார். ஒரே படிக்கட்டு ஒரே சமயம் எப்படி ஹாலிலிருந்து மாடிக்கும், மாடியிலிருந்து ஹாலுக்கும் போக முடியும்?”



Murali Tharan
தெய்வீகசக்தி என்றெல்லாம் ஒன்றும் கிடையாது! அப்பிடி யாருக்காவது இருக்குதென்றால் அவர் சனங்களின் அறியாமை மீது சவாரி செய்யும் ஆசாமியாகவோ அல்லது உணர்ச்சிகளை வியாபாரமாக்கும் ஊடகங்களின் மூதலீடாகவோதான் இருக்கவேண்டும்!!


Murali Tharan
கடவுள் பெயரைச் சொல்லித்தான் இந்த சாமியார்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். அப்படியானா...ல் கடவுள் ஏன் இது போன்ற விடயங்களை கண்டுகொள்வதில்லை... எல்லாவற்றைவும் படைத்த அவரால் ஏன் போலிகளைக் கண்டு ஏமாறாதிருக்கும் நல்ல புத்தியை மக்களுக்குப் படைக்க முடியாமல் போய்விட்டது? ஒரு குற்றத்தைிற்குத் துணைபோவதும் குற்றச்செயல் தானே! நானும் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்று தான் சொல்கிறேன்!!



Murali Tharan
தத்துவம் மாதிரி ஒன்று சொல்றன் கேளுங்க.... படிப்பு விடயத்தில பெற்றோரை ஏமாத்துறம்,... காதல் வந்தா நண்பர்களை ஏமாத்துறம், கடவுள் சமாச்சாரமெண்டா நம்மை நாமே ஏமாத்துறம். பிறகு இவனுகளாவது திருந்துறதாவது... எந்திரன் படம் ரிலீசாகப்போகுது. முதல்நாள் டிக்கெட் எடுக்கிற வேலையப் பாப்பம்!!



Murali Tharan
சந்தனக் கடத்தல் வீரப்பன் தான் கொள்ளையடித்ததை எங்கே புதைத்தான் என்பதான சண்டீவீயின் நிஜம் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் சக்தி டீவீ மாபெரும் சமுதாயச் சீர்கேடு ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருக்கும் “அம்மா பகவான்” எனும் சைக்கோ தொடர்பான சண்டீவீயின் நிஜம் நிகழ்ச்சியை ஒளிபரப்பத் தயங்குவது ஏன்?


Murali Tharan
கற்பனைக்கும் எட்டாத அளவில் விரியும் “குடும்பத் தீவிரவாத” காட்சிகளையும் மிகவும் ம...ட்டமான குத்தல் வசனங்களைக் கொண்ட “மாபியா” உறவுகளையும் உணர்ச்சிபூர்வமாக படம்பிடித்து மெகா தொடர்களாக மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் ஒளிபரப்பு செய்து மாபெரும் சமூகசேவை ஒன்றை செய்துவரும் இந்த சக்திவாய்ந்த டீவீ கொஞ்சம் சமூக சீர்திருத்தங்களையும் செய்தால் என்ன? போலிச்சாமிக்கு பயப்படுகிறார்களா அல்லது வேறு ஆசாமிகளுக்குப் பயப்படுகிறார்களா??



Murali Tharan
மட்டக்களப்பு - புளியந்தீவில் எனக்குத் தெரிஞ்ச நாலுபேர், அம்மா பகவானைப் பார்க்க இ...ந்தியாவுக்குப் போக விசா எல்லாம் எடுத்து ரெடியகும்போது தான் கள்ளபகவானின் சமூகச்சீர்கேடுகள் வெளிச்சத்திற்கு வந்தது! ---------- எடுத்த விசாவையும் ஒதுக்கிய பணத்தையும் ஏன் வீணாக்க வேண்டும் என்று நினைத்து இப்ப அந்தப் பயணத்தை ஊட்டி - கொடைக்கானல் என்று வேறு ரூட்டில் மாற்றிவிட்டார்கள்! இது எப்பிடி இருக்கு?



Murali Tharan
Dr.கமல்ஹாசன் அவர்களின் படைப்புகள் சராசரிக்கும் மேற்பட்ட இரசனையுள்ள உயர்மட்ட இரசி...கர்களால் மட்டுமே சரியாக புரிந்துகொள்ளப்படுகிறது எனக் கூறப்படுவதற்கான காரணம், அந்த மாபெரும் படைப்பாளியின் பரந்து விரிந்த சிந்தனைவீச்சிற்கு இணையாக இரசிகனும் அறிவுசார்ந்தவனாக இருக்கவேண்டியிருப்பதே!


Vivikthan Muralitharan
வானத்திலிருந்து ஒரு ஒளி வந்ததாம்... அது ஒரு போட்டோவில (Photo) பட்டதும் அந்த போட்...டோவின் Back ground மாறி இரண்டு கைகள் வந்ததாம்... இப்பிடியே போனா Adobe Photo shop, Corel Draw கொம்பனியெல்லாம் Software செய்யிறத விட்டிட்டு ”டோச் லைட்” செய்யலாம். Background மாத்தவேண்டிய படத்துக்கு லைட் அடிச்சா போதும்....!! திருகோணமலையில நடக்கிற இந்த கூத்துக்கு, சூறாவளியே Better எண்டு படத்தப் பார்த்த மாமா ஒருவர் அம்பிக்கு சொன்னார்!


Murali Tharan
கும்பிடுவதற்காக முன்வரும் இரண்டு கைகளை விடவும், உதவுவதற்காக முன்வரும் ஒரு கை மிக...வும் மதிப்பு வாய்ந்தது என்று கூறும் மனிதநேயன், தீராத கலைத்தாகம் கொன்ட கலைஞன் Dr.கமல்ஹாசன் அவர்களிற்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Avarthani Muralitharanமழை காலத்தில சாய்பாபா படம் எண்டு மட்டும் இல்ல... நாய் படுக்கும் பாய் முதல் காய் கனி வரை எல்லா இடத்திலும் இப்பிடி Fungus (பூஞ்சணம்) வளருவது சகஜம் எண்டு அப்பா சொன்னார்.


Murali Tharan
நாத்தீகர்கள், கடவுள் இல்லை என்று நம்புவது ஒண்ணும் பெரிய குற்றமல்ல! நம்ப முடியாததால் நம்புவதில்லை! அவர்களுக்கு நடிக்கத்தெரியவில்லை! தன் மனதில் தோன்றுவதை உண்மையாக சொல்கிறார்கள்! அவ்வளவுதான்!

Vivikthan Muralitharan
இதையும் வியாபாரமாக்கி அம்மா பகவான் செய்தது சரியென்று நீங்கள் நினைத்தால் AM இடைவ...ெளி C என்று டைப் செய்து 7788 கு SMS அனுப்புங்கள் எனும் கேவலமான அறிவிப்பை நாம் இன்னும் பார்க்காமலிருப்து வரை சந்தோசமே! அப்படியொரு அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

Vivikthan Muralitharan
சாய்பாபாவோ-அம்மா பகவானோ எல்லோரும் மனிதர்களே எனும் தெளிவு மக்களுக்கு வரவேண்டும். ...இயற்கையை மீறிய சக்தியென்று எவருக்கும் எக்காலத்திலும் இருந்ததில்லை. அப்படி ஒருவர் கூறுவாராக இருந்தால் அவர் ஒன்று ஏமாற்றுப் பேர்வழியாக அல்லது புத்தி பேதலித்தவராகத்தான் இருப்பார் எனும் உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு சட்டமும், ஊடகங்களும் துணை நிற்க வேண்டும்!



Murali Tharan
உனக்கு எது துன்பம் தருகிறதோ அது பிறருக்கும் துன்பம் தரும் என்று நினைத்து, நீயும் பிறருக்கு அந்த துன்பத்தை ஏற்படுத்தாதே என்பது தான் நாத்திகம் என்று கூறப்படும் பகுத்தறிவு!


Murali Tharan
மனித நாகரீகத்திற்கு முற்றிலும் எதிரான எத்தனையோ அநியாயங்களைச் செய்த “இடி அமீன்” கூட இறுதிவரை ராஜவாழ்க்கை வாழ்ந்து இறந்து போன நிலையிலில் தன்னைக் கடவுளின் அவதாரமாகக் கூறித்திரிந்த சாய்பாபா இருபத்தியெட்டு நாட்களாக மூச்சுத்திணறலில் அவதிப்பட்டு இறந்ததன் மூலம் தனது மூடநம்பிக்கைப் பக்தர்களுக்கு ஏதோவொரு செய்தியைச் சொல்லிவிட்டுப் போயிருப்பதாகவே எனக்குப் படுகிறது!

கமல் &ஆஸ்கார் - ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஒரு படம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கார் விருதின் வேற்று மொழிகளில் சிறந்த திரைப்படத்திற்காக (Academy Award for Best Foreign Language Film) பரிந்துரைக்கப்படுவது நமக்கெல்லாம் தெரிந்ததே. அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமாக பங்கு பெற்ற நடிகர் என்ற பெருமைக்கு உரியவர் நமது பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களே ஆவார். ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட அவரது 7 திரைப்படங்கள் -
1985 - சாகர் (ஹிந்தி)
1986 - சுவாதி முத்யம் (தெலுங்கு)
1987 - நாயகன்
1992 - தேவர் மகன்
1995 - குருதிப்புனல்
1996 - இந்தியன்
2000 - ஹேராம்


உலகம் உருவாகிய காலத்திலிருந்தே சூரியனைச்சுற்றி ஆயிரக்கணக்கான கற்கள் அல்லது கோள்கள் (Actually several times larger than earth) இருந்து கொண்டு தான இருக்கின்றன..... அதில் ஒன்றிரண்டு அங்க இங்க தெரியிறதால எல்லாம் உலகம் அழிஞ்சிடாது..... நம்புங்கள்... நாளைக்கும் FB ல CHAT பண்ண நாங்க எல்லாரும் உயிரோட இருப்பம்..... (ஆனானப்பட்ட கிறீஸ் யக்காவாலயே எங்கள ஒண்ணும் பண்ண முடியலயாக்கும்...)