Search This Blog

Tuesday, November 16, 2010

Face Book உரையாடல் - Part 9 (இரசிகர்களைத் தரம்பிரிக்க ஓர் சர்வதேச அளவுகோலின் அவசியம்)

கிரகணாதி கிரகணங்களுக்கப்பாலுமே ஒரு அசகாயச் சக்தியுண்டாம்,
ஆளுக்கு ஆளொரு பொழிப்புரை இறுக்கியும் யாருக்கும் விளங்காததாம்,
அதைப் பயந்ததை உணர்ந்ததை துதிப்பதுவன்றிப் பிறிதேதும் வழியில்லையாம்!ஏழைக்கு வரும் துயரை வேடிக்கை பார்ப்பததன் வாடிக்கை விளையாடலாம்.......------>>>>> இப்படித் தொடர்கிறது Dr.கமல்ஹாசன் மாமாவின் தமிழ் அறிவும் பகுத்தறிவும்!


http://www.youtube.com/watch?v=-VVGP4UKg6Q&feature=
www.youtube.com
Kamal Hassan - The shinning light of Indian Cinema This poem was sung by Kamal Hassan during "Coffee with Anu" Diwali 2010 special Jus helping to spread and make ppl understand better the brilliance of a highly deserved, under-valued, mis-interpreted, creative legend, who while waging a lone n ti
November 7 at 8:08pm ·
    • Vivikthan Muralitharan இவரின் படங்களைப் போலவே இந்தப் பாடலும் உயர்மட்ட இரசிகர்களால் மாத்திரமே விளங்கிக்கொள்ளப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
      November 8 at 9:39am ·

    • Ramanon T Di Vel இங்கு உயர் மட்டம் என்பதற்க்கு ஒரு சர்வதேச அளவு கோல் என்றோ உச்ச மட்டம் என்றோ பொருள் பொருந்தாதென்பது இவன் எண்ணம், அதை நீங்களும் ஏற்று கொள்வீர்கள் என்பது திண்ணம். தமிழறிவு அருகியதன் விளைவு வழக்கொழிந்த சொற்களின் வரிகளை பலர் வியப்புடன், விளங்காமல், வில(க்)கித் தள்ளினர். நிற்க, நாயகன் போன்ற சில படங்கள், மற்றும் பழைய அசைவோவியங்கள் தவிர இவரின் அத்தனை படத்தினதும் மூல(முழு)க் கதையும் மேற்க்கில் “பொறுக்கி”யவை என அறிந்திருக்கின்றேன். இது அவரின் பக்தர்களைத் தாக்கும் எண்ணத்தில் வரையப்படவில்லை, அன்றேல் அதற்கும் எனது வருத்தங்கள்.
      November 8 at 11:21am

    • Selladurai Arasaretnam kallakiranka polla tamil illa
      November 8 at 11:49am ·

    • Chandrakala Ramanan Pinnidinggappaaaa....
      November 8 at 2:13pm ·

    • Ramanon T Di Vel guess it wudn't provoke da blogger in a negative trance :)
      November 8 at 2:26pm ·

    • Murali Tharan
      உலகில்
      எல்லாவற்றிற்கும் சர்வதேச அளவுகோல் என்று ஒன்று இருக்குதா? ஒருவரைப்
      பார்த்து இவர் நல்லவர் என்கிறோம், இதையெல்லாம் அளவுகோல் கொண்டு கணி்திடல்
      இயலுமா?
      *
      ...அருகிய தமிழ்சொற்களை மீண்டும் அகழந்தெடுத்து அதைத்
      தங்கத்தட்டில் வைத்துப் பரிமாறும் இப்பாரிய பணியைத்
      தமிழ்இலக்கியத்திற்காக தேசிய விருதுபெற்றவர்க்கிணையாகப் புரியும்
      Dr.கமல்ஹாசன் அவர்களை வியப்புடன் நோக்குதலன்றி என் செய்யவியலும் எம்மால்?
      எல்லா இசையும் காற்றிலிருந்தே பிரிகின்றதென்பதற்காக வேய்ங்குழலை நாம் குறைத்து மதிப்பிடுவதா?
      *
      அத்தனை
      படங்களும் மேற்கில் பொறுக்கியதா..... நீங்கள் ஏதோ தவறாகக்
      கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்பது எனது தாழ்மையான கருத்து. சலங்கையொலி,
      சிப்பிக்குள் முத்து, குணா, மகாநதி, ஹேராம், அன்பே சிவம், தசாவதாரம்.....
      (கொஞ்சம் விளக்குவீர்களா ரமணன்?)
      See More
      November 8 at 8:32pm

    • Ramanon T Di Vel
      பதிலுக்கு நன்றி. எல்லாவற்றுக்கும் சர்வதேச அளவுகோல் இல்லை என்பதால் தான் தாங்கள் கூறிய “உயர் மட்டம்” என்பது விந்தையாக தொனித்தது. எது எதற்க்கு உயர் மட்டம்? எதிலிருந்து? விஜய் ரசிகனுக்கு அவரின் மசாலா படம் உயர் மட்டம். Mel Gibson இன் ரசிகனுக்கு ...அவரின் தயாரிப்புகள், இப்படி...
      பாரதியாரும், ஆழ்வார்களும், மறைமலை அடிகளும், வள்ளலாரும்... என நீண்டு செல்லும் தமிழறிஞ்ஞர்களை, அவர்தம் படைப்புகளை அறியாதவர்க்கு... சரிதான் நீங்கள் சொல்லியது, கமலஹசன் தங்கத் தட்டிலொ, தகரத் தட்டிலோ தரலாம். பஞ்ச பூதங்களில் ஒலி காற்றிலிருந்து பிரிவதில்லை. காற்று ஒரு ஊடகம் அவ்வளவே (இதற்கான சான்றுகளை Sir Arthur Avlon போன்றவர்களின் ஆக்கங்ளில் நீங்கள் தேடலாம், or if I am wrong you may refute, and I am always willing to accept the facts ;).
      அத்தனை படங்களும் என்றா கூறினேன்? :) பழைய பதிலை மீண்டும் வாசியுங்கள் (அவசரம்?). மகாநதி, ஆளவந்தான், சதி லீலாவதி, அவ்வை ஷண்முகி, பஞ்ச தந்திரம் என ஒரு டசன் தலைப்புகள் அசலை நகல் பிரித்தது என்று பல செய்தி ஊடகங்களிலும் ஆதாரத்துடன் அறியக் கிடைத்தது. தவிரவும், மகா நதி, அவ்வை ஷண்முகி, சதி லீலாவதி என்பவற்றின் அசலை நானே ரசித்திருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன், நான் கமலின் ஆரம்ப கால நடிப்பை ரசித்தேன், இப்போதும் ரசிக்கிறேன், ஆனால் என்ன செய்வது, இலுப்பைப்பூ சுவையை நா மறந்ததே :(
      See More
      November 9 at 10:28am ·

    • Ramanon T Di Vel ஒரு சிறு திருத்தம்: கமல் நடித்த படங்கள், கமலின் படங்கள் எனும் மாறு பாட்டை மனதில் கொண்டே “அத்தனை” எனும் சொல் பதிக்கப்பட்டது. அவர் நடித்த பழைய படங்கள் அவருடைய படைப்புகள் அல்ல தானே? ஆனால் அவரின் இயக்கம், தயாரிப்புகள் பெரும்பாலும்/ அத்தனையும் மேற்கின் ஒரு படைப்பின் தழுவலோ, பலவற்றின் கதம்பமாகவோ இருப்பது ‘உலக நாயகனின்’ (?) திறமைக்கு இழுக்கெனும் ஆதங்கத்தில் பதிலிட முனைந்து விட்டேன். Thank you !!!
      November 9 at 10:59am ·

    • Vivikthan Muralitharan
      இரசிகன் எனும் சொல் வந்தது இரசம் என்பதிலிருந்து. அதாவது நவரசங்களையும் ஆராதிக்கத்ததெரிந்தவன் இரசிகன். இப்படி நவரசங்களையும் கலந்து நடிப்பிலும் சினிமாவின் ஏனைய துறைகளிலும் (தரமாகத்) தரக்கூடிய ஒருவர் கமல் அவர்கள். அப்படிப்பட்ட ஓர் படைப்பில் எத்த...னை இரசங்களை ஒருவர் ஒரேசமயத்தில் இரசிக்கின்றார் என்பதை வைத்து இரசிகர்களை குறைந்தது 3 வகைகளாகவாவது வகைப்படுத்தலாம்.

      ஒரு விடத்தை இரசிக்க இரசிகனுக்கும் போதியளவு அறிவும் புரிதலும் இருத்தல் அவசியமே! உதாரணமாக யதார்த்தமான சோகக் காட்சிகளையோ அல்லது காதல் காட்சிகளையோ விட சண்டைக் காட்சிகளையே சிறுவயதில் நாம் இரசிக்கின்றோம். எமது அறிவும். ஈடுபாடும் அதிகரிக்கும்போது தான் எமது இரசனையின் வீச்சும் அதிகரிக்கிறது. படைப்பாளிக்கும் ஓர் கௌரவம் கிடைக்கிறது.

      ஒரு நகைச்சுவைக்கு எத்தனை பேர் சிரிக்கின்றனர், சிரிக்காமல் விடுகின்றனர் மற்றும் எத்னை பேர் உடனடியாகவும், தாமதித்தும் சிரிக்கின்றனர் என்பதெல்லாம் இரசிகனின் அளவுமட்டத்தின் குறிகாட்டிகளே!!

      A fan is a person with a liking and enthusiasm for something.
      ஆனால் வெறுமனே ஒரு Fan Club வைத்துக்கொண்டு போஸ்டர்களுக்கு பால் ஊற்றவும், தியேட்டர் திரைக்குத் தீவைக்கவும் செயல்படும் இரசிகர்களுக்கு மத்தியில் இரசிகர் மன்றங்களை “நற்பணி மன்றங்களாக்கி” கண்தானம், இரத்ததானம் ஏன் உடல்தானம் என சமூகச் செயல்பாடுகளில் இரு தசாப்தங்களாக ஈடுபடுபவர்கள் நிச்சயமாக உயர்மட்ட இரசிகர்களே! இவை கூட இரசிகனின் அளவுமட்டத்தின் குறிகாட்டிகளே!!
      --------
      See More
      November 9 at 11:29am ·

    • Murali Tharan
      Baby's Day Out என ஒரு படம் வந்தது, பின்னர் அது சுட்டிக்குழந்தை என நகலெடுக்கப்பட்டது.
      Mrs. Doubtfire என மற்றொரு அசல் வந்தது, பின்னர் அது அவ்வைசண்முகியாக நகலெடுக்கப்பட்டது.
      இந்த நான்கு படங்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நம்புகின்றேன். ...தரத்திலும் கதை சொல்லப்பட்ட விதத்திலும் சுட்டிக்குழந்தைக்கும் அவ்வை சண்முகிக்கும் எத்தனை பெரிய வேறுபாடு.......

      Copy-Paste என்பது வேறு, remake என்பது வேறு. கிறிஸ் கொலம்பசும், ரொபின் வில்லியம்சும் மனம்திறந்து பாராட்டுமளவிற்கு படம் எடுத்துக் காட்டியவர்தான் உலக நாயகன். அசலை நகல் மிஞ்சும் அளவென்றால் அதில் எத்தனை ஈடுபாடும், உழைப்பும் இருந்திருக்கும்????
      ----
      இந்த உலகிலுள்ள 194 நாடுகளில், 6700 அங்கீகரிக்கப்பட் மொழிகளில் வெளிவரும் அத்தனை திரைப்படங்களையும் எம்மால் பார்த்திட முடியுமா...??? அவற்றில் மிகத்தரமான சிலவற்றை தெரிவு செய்து தனது உயரிய நடிப்பில், அதி நவீன தொழில்நுட்பத்தில் ஒரிஜினலையும் மிஞ்சிய தரத்தில் Remake சினிமாவாக இடைக்கிடையில் தருவதிலும் கமல் அவர்களே முன்னிலையில் இருக்கிறார்.
      (கமல் அவர்கள் தனது சொந்தக் கற்பனையில் உதிக்காத but தான் இயக்கு்ம் மற்றும் தயாரிக்கும் அத்தனை சினிமாக்களும் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)
      See More
      November 9 at 11:56am ·

    • Ramanon T Di Vel ‎:)
      November 9 at 3:00pm ·

    • Murali Tharan இதுக்கு என்ன அர்த்தம் ரமணன்?
      November 9 at 3:01pm ·

    • Ramanon T Di Vel
      ‎//....உலகில்
      எல்லாவற்றிற்கும் சர்வதேச அளவுகோல் என்று ஒன்று இருக்குதா? ஒருவரைப்
      பார்த்து இவர் நல்லவர் என்கிறோம், இதையெல்லாம் அளவுகோல் கொண்டு கணி்திடல்
      இயலுமா?//

      ...:)

      ///...ஓர் படைப்பில் எத்த...னை இரசங்களை ஒருவர் ஒரேசமயத்தில் இரசிக்கின்றார் என்பதை வைத்து இரசிகர்களை குறைந்தது 3 வகைகளாகவாவது வகைப்படுத்தலாம். ///

      :D
      See More
      November 9 at 3:13pm ·

    • Murali Tharan
      ஓஹோ.... இதுதான் உங்கள் புன்சிரிப்பின் பின்னணியா.....

      மீண்டும் சொல்றன்... இரசனை மட்டத்தை அளவிட இதுவரை சர்வதேச அளவுகோல் என்று ஒன்று உருவாக்கப்படவில்லை.

      But சில குறிகாட்டிகளைக் கொண்டு ஒப்பீட்டளவில் உயர் - இடை - அடி மட்டம் என்றாவது வகைப்படத்திக் ...கூறுவதில் “விந்தையாக தொனிப்பதற்கு” எதுவுமில்லை!

      :-)
      See More
      November 9 at 3:46pm ·

    • Ramanon T Di Vel rib-tickling, but gud try ;)
      November 12 at 9:42am ·

    • Murali Tharan வடிவேலு பாணியில் “Be Careful - என்னச் சொன்னன்” என்கிறமாதிரி இருக்கு!
      November 12 at 9:49am ·

    • Ramanon T Di Vel it's ur spectacles and it's your vision, so I don't buy it. oops :-P
      November 12 at 9:51am ·

    • Murali Tharan of course! its true.
      November 12 at 10:06am ·

    • Ramanon T Di Vel வரும் ஆன வராது... இருக்கு ஆனா இல்லை. நன்னா சொன்னீங்க போங்கோ :)
      November 12 at 1:19pm ·


    • Ramanon T Di Vel
      தகவலுக்கு நன்றி. அது நல்ல விடயம் தான். அதே சமயம், ஒரு நிகழ்ச்சியின் (Live in Concert) தனது ஒட்டு மொத்த வருமானத்தையும் Haitii நிவாரணத்துக்காக கொடுத்த Lady Gaga ( singer), உலகெங்கிலும் குழந்தைகளைத் தத்தெடுத்து தனது பிள்ளைகளாகவே வளர்த்து வரும்... Brad Pitt & Angelina Jolie தம்பதிகள், Aamir Khan இன் சமூக அக்கறைகளும் செயற்பாடுகளும் என 'எங்கும்’ சில சாதனைகள் நடக்குது என்பதை அறிந்திருப்பீர்கள். I don't understand where Kamal's social service connects with his skills in filim/ acting. Si'l vous plait responde.

      http://www.looktothestars.org/celebrity/80-jackie-chan
      http://www.looktothestars.org/celebrity/27-brad-pitt
      http://www.looktothestars.org/celebrity/2265-delta-goodrem
      http://www.youtube.com/watch?v=xGxL8nK9kjk
      See More
      November 12 at 4:29pm ·

    • Murali Tharan
      பணம் இருக்கிறவங்க அதை குடுக்கிறாங்க.. இல்லாதவங்க உடல் உறுப்புகளையாவது குடுக்கிறாங்க....
      லேடி ககா வும் நான் தந்த இணைப்பில் உள்ள கமல் இரசிகர்களும் ஒன்றா....???!!!!

      நான் நினைக்கிறேன் லேடி ககாவின் அந்த ஒரு நாள் நிகழ்ச்சியின் வருமானம் இந்த இரசிகர்......களின் வாழ்நாள் செலவாக இருக்கும்....
      எதைக் கொடுக்கிறார்கள், எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பதை விட ------>>> கொடுக்கிறார்கள்! அதுதான் இங்கு பேசப்பட வேண்டிய விடயம்.

      சினிமா கமல் அவர்களது தொழில். எல்லாவற்றிலும் சமூக சேவை இருக்கவேணுமா....??? ரொம்ப டூ மச் ஐயா இது.

      கமல் அவர்கள் அண்மையில் ஆயிரம் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறாரே அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் பார்ப்பம்.

      பிட்டும் அஞ்சலினாவும் செய்வதெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு இது தெரியாமலா இருந்நிருக்கும்?
      See More
      November 12 at 6:54pm ·

    • Ramanon T Di Vel
      ‎///சினிமா கமல் அவர்களது தொழில். எல்லாவற்றிலும் சமூக சேவை இருக்கவேணுமா....??? ரொம்ப டூ மச் ஐயா இது.///

      I don't understand where Kamal's social service connects with his skills in filim/ acting. நான் அவரின் சினிமாவை விமர்சித்தால் நீங்கள் அவரி...ன் ரசிகர்கள் உடம்பிலிருந்து எதை எதையோ ‘கழட்டி’ கொடுப்பதைப் பேசுகிறீர்கள். அவரின் சமூக சேவை எனது விமர்சனம் இல்லை. அப்படியான சேவை இதை விட அதிகமாக எல்லோராலும் செய்யப்படுவது தான். ஏன் NGO களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? வெளி நாடுகளில் உள்ள சாதாரண பிரஜைகளின் முகம் தெரியாத ’இடுதல்’ தான்.

      நீங்கள் எனது பதில்கள் எதையும் சரியாக வாசிப்பதில்லை என தோணுகிறது. பழைய பதில்களிலும் இதை அதிகமாக கண்டதால் உங்களுக்கு பதிலிடுவது பயனற்றது. So I feel like leaving your box. Thank u. 'n' Happy roaming (?) !!! :-)
      See More
      Yesterday at 11:36am ·

    • Murali Tharan
      எனது பதில்கள் உங்களை இந்த அளவிற்கு வெறுப்பேற்றும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. உங்களை மகிழ்சிப்படுத்தும் விதமாக மட்டும் பதில் எழுதம் அந்த வித்தை எனக்குத் தெரியாமலிருப்பதற்கு என்னை மன்னியுங்கள்.

      உங்களின் ஒவ்வொரு பதிலிலும் நான் புதிதாக ...கற்றுக்கொள்வதற்கு எத்தனையோ விடயங்கள் இருந்தன. அந்தவகையில் தாங்கள் இவ்வளவு நாட்களும் விவிக்தனின் இந்த இணைப்பில் கருத்துரைத்தமைக்கு நன்றி.

      மற்றும் எல்லோரும் எம்மைப்போலவே அறிவ பூர்வமாகத்தான் சிந்திக்கவேணும் என்று எப்பொழுதும் எதிர்பார்க்காதீர்கள். முரளியைப்போலவும் சிலர் இருப்பார்கள், அவர்களுடனும் கருத்துப்பரிமாறல்களை எவ்வாறு செய்யலாம் என்பதில் திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள். எதிர்காலம் இன்னும் பிரகாசமாக இருக்கும்.
      See More
      23 hours ago