Search This Blog

Tuesday, December 15, 2009

Face Book உரையாடல் - Part 7: பத்தாம் கட்டையில் பரபரப்பு


Freddy Abraham

Freddy Abraham: ஏழைகளுக்கு உதவுவதிலோ அல்லது வாய் பேசா உயிரினங்களை அரவணைப்பதிலோ கடவுளைக் காண முடிந்த எனக்கு பத்தாம் குறிச்சியில் படத்தில் தெரிந்த அந்தக் கைகளில் Adobe Photoshop ஐத் தான் காண முடிந்ததே தவிர கடவுளைக் காண முடியவில்லை. போலி டாக்டர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் போலிஸ் போலி கடவுள்களை உருவாக்கும் இவர்களை மட்டும் ஏன் கண்டும் காணாமல் இருக்கிறது.

நேற்று 23:36 மணிக்கு

Nagul Selven
Nagul Selven
என்ன நடந்தது என்று தெளிவாக சொல்ல முடியுமா??

-----------------------(0)-----------------------

இன்று 08:28 மணியளவில்
Murali Tharan
Murali Tharan


நல்ல யோசனைதான் Freddy. ஆனால் போலி கடவுளையோ அதை உருவாக்குபவர்களையோ அத்தனை எளிதாக கைது பண்ண முடியாது. உண்மையான டாக்டர் என்றால் அவர் யார், அவரின் தகுதிகள், சான்றிதள்கள் என்று உறுதிப்படுத்த பல ஆவணங்கள் உண்டு. So அது இல்லாதவர்கள் போலி!

But இங்கே உண்மையான கடவுளை இப்படி அடையாளம் கண்டு வேறுபிரிக்க முடியுமா...... மேலும் பார்க்க

அது தான் கடவுள் பேரைச் சொல்லி கொள்ளையடிக்கும் கும்பல் அதிகரிச்சுக்கொண்டு போகுது. இது (உண்மையான) கடவுளின் Operation Mechanism இலுள்ள குறைபாடு தான் காரணம்.
இன்று 12:12 மணியளவில் ·

-----------------------(0)-----------------------

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
David Copperfield மாமா, Hudini மாமா போன்ற மிகப்பெரிய மஜிக் விற்பன்னர்களையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு இப்ப Local Magic மலிஞ்சு போய் கிடக்கு. எல்லாம் Photoshop தயவால தானே நடக்குது.
இன்று 14:57 மணியளவில்

-----------------------(0)-----------------------

Somasuriyam Thirumaran
Somasuriyam Thirumaran
அப்ப Freddyயும் ஏதே நம்பிக்கையில் தான் 10ம் குறிச்சிக்குச் சென்றிருக்கர் போல.

அவ்வளவு சுலபமாக போலி கடவுள்களை கைது செய்ய முடியாது காரணம் ”கைது செய்யும் போது சாபம் கொடுத்து விடுவார்கள் என்ற பயம் வரலாம்” தவிர அவா்கள் கைது செய்ய வருபவா்களுக்கு ”சாபம் கொடுப்பதற்கு பதில் சம்திங் கொடுத்து விடுவார்கள்”.
இன்று 19:21 மணியளவில்

-----------------------(0)-----------------------

Janarthanan Emmanuel
Janarthanan Emmanuel
antha padathuku mela srilanka kulla matha. ethila matha vai thangum karangal....???????? ipayavathu vilanga illaya.... Photo shop in vannam. kadavulai vaithu thangaluku pukal thedum manitharkalil ivarkalum adankuvar.....
இன்று 20:12 மணியளவில்

-----------------------(0)-----------------------

Murali Tharan
Murali Tharan
ஒரு Ex. Graphic Designer என்ற வகையில் சொல்கிறேன்... அந்தப் படத்தில் இருக்கும் இரண்டு கைகளும் ஒரே கை தான். I mean ஒரு கையைத்தான் Copy-paste பண்ணி Mirror Image ஆக மாற்றி போட்டிருக்கு. கையில் விழும் லைட் மற்றும் நிழலின் திசையைக் கவனியுங்கள். இயற்கையில் அப்படி வருவதற்கு சாத்தியமே இல்லை. இந்த Graphic ஐ மின்னலின் மூலம் ‘சாமி‘ செய்திருந்தாலும் சரி, Photoshop இல் ஒரு ‘ஆசாமி‘ செய்திருந்தாலும் சரி அடுத்த தடவை இத் தவறைக் கவனிப்பது நல்லது.
இன்று 20:25 மணியளவில் ·

-----------------------(0)-----------------------

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
வானத்திலிருந்து ஒரு ஒளி வந்ததாம்... அது ஒரு போட்டோவில (Photo) பட்டதும் அந்த போட்டோவின் Background மாறி இரண்டு கைகள் வந்ததாம்... இப்பிடியே போனா Adobe Photo shop, Corel Draw கொம்பனியெல்லாம் Software செய்யிறத விட்டிட்டு ”டோச் லைட்” செய்யலாம். Background மாத்தவேண்டிய படத்துக்கு லைட் அடிச்சா போதும்....!! திருகோணமலையில நடக்கிற இந்த கூத்துக்கு, சூறாவளியே Better எண்டு படத்தப் பார்த்த மாமா ஒருவர் சொன்னார்!
இன்று 20:27 மணியளவில்

-----------------------(0)-----------------------

Freddy Abraham
Freddy Abraham
பிந்திய தகவல்களின்படி பார்த்தீங்க எண்டா முரளி போப் ஆண்டவர் உள்ள எல்லா வேளாங்கன்னி மாதா படங்களிலும் கைகள் முளைச்சிருக்காம். அதாவது ஒரே மாதிரியாக உள்ள எல்லாப் படங்களிலும். இது என்ன சொல்லுது எண்டா எல்லாப் படங்களும் ஒரே மூலப்படத்தின் பிரதிகள்தான். கைகள் தாங்குகின்ற இந்த மாதாவைக் கொண்ட படத்தின் பல பிரதிகள் ஏற்கனவே பல இடங்களிலும் விற்கப்பட்டு உள்ளது. நம்மவரின் கண்ணுக்கு அது ஏனோ மின்னல் வெட்டிய பிறகுதான் தெரிந்து உள்ளது. இது அவரின் கண்ணின் குற்றமா அல்லது கடவுளின் குற்றமா.
இன்று 20:57 மணியளவில்

-----------------------(0)-----------------------

Murali Tharan
Murali Tharan
Trinco விலிருந்து என் நண்பர் ஒருவர் கூறினார், திருமலையை மிகப்பெரிய அழிவிலிருந்து (சூறாவழியை என்று நினைக்கிறன்) காப்பாற்றிவிட்டு அதன் அடையாளமாக இவ்வாறு கடவுள் தோன்றினாராம். ----------------??!!

எங்கயோ Logic இடிக்குதா? திருகோணமலை மாவட்டத்தையே காப்பாற்றியதன் அடையாளம் மாவட்டத்தைப் பிரதிபலிக்கும் மாவட்ட செயலகத்திலோ அல்லது at least... மேலும் பார்க்க பிரதேச செயலகத்திலோ தானே வரவேண்டும்..

இப்ப பத்தாம் குறிச்சியில் இருக்கும் யாரோ ஒரு குப்பனோ சுப்பனோ தான் மாவட்டத்தின் பிரதிநிதியாக கடவுள் கண்ணுக்குத் தெரிந்திருக்கிறார்...
11 மணி நேரம் முன்பு ·

-----------------------(0)-----------------------

Vivikthan Muralitharan
Vivikthan Muralitharan
இன்னுமொரு logic இடிக்குது. காப்பாற்றியதன் அடையாளம் எண்டா மாதா படம் ஒரு கையாக மாறியிருந்தால் பரவாயில்லை, இங்கு வானத்திலிருந்து மாதாவைத் தாங்கிப் பிடிக்க (காப்பாற்ற) ஒரு மின்னல் வந்திருக்கிறது... But மக்களைக் காப்பாற்ற வந்ததற்கான தடயம் ஏதும் அதில் இல்லை... அப்ப கடவுள் கூட ஆபத்தில் தன்னுடைய சொந்த பந்தங்களை காப்பதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறாரா? இப்படிப்பட்ட சுயநலம் நிறைந்த செய்தியைச் சொல்லும் அந்த படத்தைப் பார்க்கத்தான் இவ்வளவு பெரிய கூட்டமா...??!!
Shame - Shame Puppy Shame!
11 மணி நேரம் முன்பு

-----------------------(0)-----------------------

Velnayagam Nirmalraj
Velnayagam Nirmalraj
mudinthal antha "maatha" photovai send pnnunka.
புதன், 10:01 க்கு

-----------------------(0)-----------------------

Murali Tharan
புதன், 10:49 க்கு ·

-----------------------(0)-----------------------

Amirthalingam Suntharalingam
Amirthalingam Suntharalingam
logic பற்றி பேசினார்கள். இன்னுமொரு லாஜிக். இடி மின்னல் சூறாவளிக்கு . பிரேம்பன்னி வைக்கப்பட்டிருக்கும் போட்டோ, அப்படியே விழுந்து உடைந்து போகுமா? அல்லது, பிரேம் தொங்கி கொண்டிருக்க உள்ளே இருக்கும் படம் மட்டும் வெளியே வந்து விழுமா? தாங்கி பிடிக்க வந்த கை பிடிக்க வேண்டியது போட்டோவையா? பிரேமையா? இங்கே போட்டோவை பிடித்திருக்கும் கை, தான் வந்த வேலை முடிந்த பிறகும் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறது.. போகவேண்டியது தானே. வரும்போது நாங்க பார்கவில்லை. போகும்போதாவது நாங்க பார்க்கிறோம்.,,, இல்லை, போனபிறகாவது பார்க்கிறோம். கை உள்ள போட்டோகளை கொண்டுவந்து , அதிகம் வேணாம், ஒரு 4 ,5 போட்டோக்களை, ஒரு லாக்கரில் வைத்து பூட்டுவோம். மற்ற போட்டோக்களில் இருந்து எப்ப அந்த கை போகுதோ, அப்புறம் லாக்கரை திறந்து பாப்போம். இந்த டீலுக்கு எவராவது வருவாங்களா?

-----------------------(0)-----------------------

Vivikthan Muralitharan

-----------------------(0)-----------------------

Amirthalingam Suntharalingam
Amirthalingam Suntharalingam
இன்னுமொரு புயல் வந்தால்,இந்த கையையும் தாங்கி பிடிக்க இன்னும் இரண்டு கை வரவேணும் அல்லவா? போட்டோவில் இடம் பத்தாது. அதனால், இப்ப வந்த கை போறது தான் நல்லது.போய்விட்டு அடுத்த புயலுக்கு வரலாமே.

-----------------------(0)-----------------------

Amirthalingam Suntharalingam
Amirthalingam Suntharalingam
vivikthan muralitharan, thanks your comment.


-----------------------(0)-----------------------

Murali Tharan
Murali Tharan
ஒரு மின்னல் வெளிச்சத்தில வந்த கை அவ்வளவு சுலபமாக போக முடியாது... அப்பிடி போறதெண்டா மின்னலுக்கு எதிர்மறையா அமாவாசை மாதிரி ஒரு நாள்ள தான் நடக்கணும். அடுத்தது இப்பவும் இந்தப் படத்தை பார்க்க கூட்டம் கூடுதோ தெரியாது... அப்பிடி கூட்டம் இருந்தா எப்பிடியும் அந்த கை மறையிற வித்தையை அரங்கேற்ற முடியாது... So அடுத்த புயலுக்கு வேற ஏதாவது புது டெக்னிக் கண்டு பிடிக்கலாம்... அதப் பார்க்க இன்னும் கூட்டம் கூடும்.... வருமானத்திற்கும் குறைவிருக்காது!

-----------------------(0)-----------------------

Murali Tharan
Murali Tharan
//ஒரு 4 ,5 போட்டோக்களை, ஒரு லாக்கரில் வைத்து பூட்டுவோம். மற்ற போட்டோக்களில் இருந்து எப்ப அந்த கை போகுதோ, அப்புறம் லாக்கரை திறந்து பாப்போம்//

மிகவும் அருமையாக சொன்னீங்க அமிர்தலிங்கம். எல்லா ஆய்வுகூடங்களிலும் இப்படியான ஒரு கட்டுப்பாட்டு பரிசோதனை (Conditional Test... மேலும் பார்க்க) `செய்துதான் உண்மையை நிரூபிப்பார்கள்... கடவுள் விடயத்தில் மட்டும்தான் ஏன் எதற்கு என்று இல்லாமல் நீயா நானா என்று போட்டிபோட்டுக்கொண்டு முட்டாள்களாகின்றனர்.

உண்மையைத் தேடும் ஆர்வத்தைவிட எதிர்ப்பதால் ‘கடவுளின்‘ தண்டனைக்கு ஆளாகவேண்டிவருமோ என்ற பயம்தான் காரணம். (வேடிக்கையான விடயம்தான்)

-----------------------(0)-----------------------



No comments: